ad11

"காலா" - திரைவிமர்சனம்

June 07,2018  

Kaala

மும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. ரஜினியின் மகன் மும்பையில் தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வருகிறார், மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர்.

இந்தநிலையில், மும்பையில் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.

இதனால், கோபமடையும் சம்பத், ரஜினிகாந்தை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பை கட்ட நினைக்கிறார்.

இதனால், இவருக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே பகை ஏற்படுகிறது, இறுதியில் நானா படேகர், ஹீமா குரேசியிடமிருந்து, தாராவி மக்களை ரஜினிகாந்த் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கம் அதிருகிறது, அவர் வசனம் பேசும் போது தீப்பொறி பறக்கிறது, சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார், ரஜினிகாந்தின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் தனது வெகுளித்தனமான நடிப்பால் அனைவரையும் கவருகிறார், ரஜினியின் முன்னால் காதலியாக வரும் ஹீமோ குரேசி மென்மையாகவும், பிறகு அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தின் வில்லனாக வரும் நானா படேகர் அபாரமாக நடித்துள்ளார். இயக்குனர் ரஞ்சித் மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி படத்தை இயக்கி வெற்றிபெற்றுள்ளார்.

மொத்தத்தில், " காலா ", அசைக்கமுடியாதவன்.