ad11

பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளமுடியாது!: நடிகர் சங்கம்

December 12,2017  

Nadigar Sangam rejects Ponvannan resignation
நேற்று (11.12.2017) நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு.........

நேற்று (11.12.2017) நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு.

உபதலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது. ..

பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லையென்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

நன்றி.

எம்.நாசர்

தலைவர்